கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குருகிராமிலுள்ள மெடன்டா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இதற்கிடையில் அவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய அமித்ஷா! - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு திரும்பினார்.
Home minister Amit Shah discharged from AIIMS
தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத் தொடரில் கலந்துகொள்வதற்காக முழு உடல் பரிசோதனை செய்ய கடந்த ஞாயிற்றுக் கிழமை (செப் 13) டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் இன்று மாலை 5 மணிக்கு பரிசோதனைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வீடு திரும்பினார்.