தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நிர்மலா சீதாராமனுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு..?'- திமுக எம்எல்ஏ கேள்வி - butget 2019

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முழுப்பெயரையும் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்ட ஆங்கில பத்திரிகைகளை, திமுகவின் மதுரை சட்ட மன்ற உறுப்பினர் பி.டி. தியாகராஜன் கண்டித்துள்ளார்.

ஆங்கில பத்திரிக்கை

By

Published : Jul 6, 2019, 7:16 PM IST

பாராளுமன்றத்தில் இரண்டாம் முறையாக அமோக வெற்றி பெற்ற பாஜக அரசின் முதல் பட்ஜெட் நேற்று வெளியிடப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வெளியிட்டார். பட்ஜெட் குறித்த செய்திகளை வெளியிட்ட இந்தியாவின் முன்னணி ஆங்கிலப் பத்திரிகைகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முழுப்பெயரையும் குறிப்பிடாமல் வெறும் 'நிர்மலா' என்று வெளியிட்டு இருந்தது.

இதற்கு திமுகவின் மதுரை சட்ட மன்ற உறுப்பினர் பி.டி. தியாகராஜன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தற்போது வெளியாகி இருக்கும் பட்ஜெட் என்னைப் பெரிதும் கவரவில்லை.இருந்தாலும் முன்னணி ஆங்கிலப் பத்திரிகைகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயரை 'நிர்மலா' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இதே போல் அருண் ஜெட்லியின் பெயரை 'அருண்' என்றும் நரேந்திர மோடியின் பெயரை 'நரேந்திரா' என்றும் குறிப்பிடுமா..? என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details