தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிழல் உலக தாதா ரவி பூஜாரி கைது! - shela rashid

கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என, பல ஆண்டுகளாக பல்வேறு குற்றங்களைச் செய்துவந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரி, செனிகல் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவி பூஜாரி

By

Published : Feb 1, 2019, 9:38 AM IST

1990களில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரை மிரட்டி பணம் வாங்குதல், கடத்தல் என பல்வேறு குற்றங்களைச் செய்துவந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரி, ஆஸ்திரேலியாவில் பதுங்கியிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

தாதா ரவி பூஜாரி மங்களூர் உடுப்பி நகரைச் சேர்ந்தவர். ஆங்கிலம், கன்னடம் என இருமொழிகளிலும் புலமை வாந்த பூஜாரி, நவி மும்பையில் சிறைதண்டனை அனுபவித்து வரும் சோட்டா ராஜனின் கீழ் செயல்பட்டு வந்தார்.

2001ஆம் ஆண்டு அவரை விட்டுப் பிரிந்து, தனியாக ரவுடிகளை சேர்த்துக்கொண்டு பல்வேறு குற்றங்களை செய்துவந்தார். பல நாட்களாக தேடப்பட்டு வந்த ரவி பூஜாரி, மும்பை போலீஸாரால் செனிகல் நாட்டில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் இவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, ஜேஎன்யு மாணவர் உமர் கலித், மாணவ சமூக செயற்பாட்டாளர் சீலா ராஷித், தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி ஆகியோருக்கு தாதா ரவி பூஜாரி கொலை மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details