பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ராஜீவ் பிரதாப் ரூடி, "கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் விதமாக செயல்படுவது யாராக இருந்தாலும் அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று மோடி எச்சரித்துள்ளார்" என்றார்.
'வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை' - பாஜகவினருக்கு மோடி எச்சரிக்கை - மோடி எச்சரிக்கை
டெல்லி: "வன்முறையில் ஈடுபடும் பாஜக பிரமுகர்கள் யாராக இருந்தாலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று, பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
மோடி
சமீபத்த்தில் மாநகராட்சி அலுவலரை, பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆகாஷ் விஜய்வர்கியா தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jul 2, 2019, 7:43 PM IST