தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிக் டாக் விபரீதம்: லைக் கிடைக்காததால் தற்கொலை செய்த இளைஞர்! - Tik Tok

நொய்டா: உத்தர பிரதேசத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் டிக் டாக்கில் லைக் கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இளைஞர் தற்கொலை குறித்து பேசிய காவல் துறை
இளைஞர் தற்கொலை குறித்து பேசிய காவல் துறை

By

Published : Apr 18, 2020, 6:12 PM IST

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள சலர்பூரில் 18 வயது இளைஞர் ஒருவர் வசித்து வந்தார். இவர், தினம்தோறும் டிக் டாக் செயலியில் தான் நடித்த வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

டிக் டாக் அடிமையான இவருக்கு லைக் அதிகளவில் வரவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடம் கூறி வருந்தியுள்ளார். தனக்கு லைக் அதிகமாக கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் வீடு திரும்பிய பெற்றோர், மகன் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்தவரின் உடைலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளைஞர் தற்கொலை குறித்து பேசிய காவல் துறை

மேலும், தற்கொலை குறித்து பெற்றோரிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர், டிக் டாக்கில் அதிக லைக் கிடைக்கவில்லை என்பதால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details