தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில் நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான தகவலை அளிக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது இந்திய பிரதமர்கள் வரலாற்றில் மோடி முதல்முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்ற இருப்பதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளை மோடி அறிவிப்பாரோ? - உமர் அப்துல்லா கிண்டல் - உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: மக்களவைத் தேர்தல் முடிவுகளை மோடி அறிவிப்பாரோ என காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
abdullah
இந்நிலையில், மோடியின் அறிவிப்பு குறித்து காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருவேளை மக்களவைத் தேர்தல் முடிவுகளை மோடி அறிவிப்பாரோ” என பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், மோடியின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைக்குட்பட்டு இருக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Last Updated : Mar 27, 2019, 12:28 PM IST