இந்தியாவில் பல்வேறு வங்கிகளிடமிருந்து சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதனை திரும்பி செலுத்தாமல், லண்டனுக்குத் தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த, இந்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.
விஜய் மல்லையா மேல்முறையீடு: பிரிட்டன் நீதிமன்றத்தில் இன்று விசாரணை - extradiction
லண்டன்: இந்தியாவுக்கு தன்னை நாடுகடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி, தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
vj malya
இந்நிலையில், மல்லையா மீதான கடன் மோசடி தொடர்பாக விசாரணை செய்த லண்டன் நீதிமன்றம், 'அவரை நாடு கடத்தலாம்' என 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அதற்கு எதிராக மல்லையா பல்வேறு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார். அவை அனைத்தும் தள்ளுபடியான நிலையில், மீண்டும் லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
Last Updated : Jul 2, 2019, 11:53 PM IST