பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா கடற்கரை பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள், கர்நாடகாவின் மல்பி அல்லது அதை சுற்றியுள்ள பகுதிகளில் மறைந்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கிய மங்களூரு கடலோர காவல்படை, கடலோர மாவட்டங்கள் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து தப்பித்த பயங்கரவாதிகள் கர்நாடகாவில் தஞ்சம்! - கர்நாடகம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கர்நாடகாவின் கடற்கரை பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதி
நாட்டிற்குள் நுழைவதற்கு கடலோர பகுதிகள் எளிதானவை என்பதால், சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் நடந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் புகைப்படம் கொண்ட சுற்றறிக்கையை சம்பந்தப்பட்ட இடங்கள் முழுவதும் ஒட்டி தேடுதல் வேட்டையை காவல்துறை முடக்கியுள்ளது.