தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் தூப்பாக்கிச் சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீர்: சோபியனில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

jammu
jammu

By

Published : Jun 10, 2020, 3:46 PM IST

காஷ்மீரில் உள்ள சோபியன் மாவட்டத்தில் சுகூ பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் இன்று காலை தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் களமிறங்கினர்.

அப்போது, பயங்கரவாதிகள்பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலின்போது இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது‌. சோபியன் பகுதியில் கடந்த நான்கு நாள்களில் மூன்றாவது முறையாக என்கவுன்டர் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details