தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக கவுன்சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இருவர் கைது - தீவிர விசாரணையில் சி.ஐ.டி. - ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல்

கொல்கத்தா: பாஜக கவுன்சிலர் கொலை வழக்கு விசாரணையை மேற்கொண்டுவரும் குற்ற ஆய்வுத் துறையினர் (சிஐடி) இருவரை கைதுசெய்துள்ளனர்.

பாஜக கவுன்சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இருவர் கைது - தீவிர விசாரணையில் சி.ஐ.டி
பாஜக கவுன்சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இருவர் கைது - தீவிர விசாரணையில் சி.ஐ.டி

By

Published : Oct 6, 2020, 4:58 PM IST

மேற்கு வங்கத்தில் 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அங்கு ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுவருகின்றன.

மாநிலம் முழுவதும் அதிகரித்துவரும் அரசியல் கொலைகளின் காரணமாக மேற்கு வங்கத்தில் அரசியல் மோதல்களை மேலும் தீவிரமடைய வைத்துள்ளது.

இந்நிலையில், வடக்கு 24 பர்கானா பாஜக பிரமுகரும், கவுன்சிலருமான மணீஷ் சுக்லா, திடாகார் பகுதி காவல் நிலையம் அருகே நேற்றுமுன் தினம் (அக். 04) இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் காரணமாக, பராக்போர் நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும், இந்தக் கொலையை கண்டித்து பராக்போரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மணிஷ் சுக்லா கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த சி.ஐ.டி. காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு விசாரணையில் இறங்கினர்.

இந்தப் படுகொலைக்கு அரசியல் காரணமா அல்லது தனிப்பட்ட பிரச்னை காரணமா என்ற கண்ணோட்டத்தில் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதனிடையே, சிசிடிவி காட்சிகளில் பதிவான இருவரை தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்றிரவு சி.ஐ.டி. காவல் துறையினர் கைதுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சி.ஐ.டி. காவல் துறையினர், "சுக்லா கொலை வழக்கு தொடர்பாக நாங்கள் இருவரை கைதுசெய்துள்ளோம். இந்தக் கொலையில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலதிக விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட சுக்லா மீது பல கொலைகள், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவருக்குத் தனிப்பட்ட வகையில் பல எதிரிகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அரசியலில் சேர்ந்து வடக்கு 24 பர்கானாவின் சிபிஐ (எம்) கட்சியின் முன்னணித் தலைவராக இருந்துவந்த மணிஷ் சுக்லா உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு கட்சித் தாவியுள்ளது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details