கர்நாடகாவில் போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக்கோரியும், டிஜே ஹள்ளி வழக்கில் கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சீனப்பாவுக்கு நேற்று மிரட்டல் கடிதம் வந்தது.
இந்தக் கடிதத்துடன் சேர்த்து வெடிகுண்டு பொருள்களையும் அனுப்பியிருந்ததால், நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கடிதம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.