ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த வகையில், கேரளாவிலிருந்து 21 ரயில்கள் மூலம் 24 ஆயிரத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் ஒருவத்தில்கோட்டா (Oruvathilkotta) பகுதியில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுவந்த 700 தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல முடியாத விரக்தியில் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே இடத்தில் 700 பேர் கூட்டமாக கூடியது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச முயன்ற போது, அவர்கள் மீது தொழிலாளர்கள் கற்களை வீசியதில் இரு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.