தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாபில் சீன ட்ரோன்கள் பறிமுதல் - பஞ்சாபில் போதைப் பொருள்

சண்டிகர்: பஞ்சாபில் சீனாவின் மூன்று ட்ரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

Two Chinese drones seized in Punjab, soldier among 3 held
Two Chinese drones seized in Punjab, soldier among 3 held

By

Published : Jan 11, 2020, 4:42 PM IST

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருள் கடத்தல், ஆயுத விற்பனை ஆகிய செயல்களில் ஈடுபட்ட பணியில் உள்ள ராணுவ வீரர் ஒருவரையும் இரண்டு கடத்தல்காரர்களையும் பஞ்சாப் காவலர்கள் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து அதிநவீன ட்ரோன்கள் (ஆளில்லா குட்டி விமானம்), ட்ரோன் பேட்டரிகள், இரண்டு வாக்கி டாக்கிகள், ஆறு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை பயணிக்கும் இந்த விமானம் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருட்களை இந்தியாவுக்குள் கடத்த பயன்பட்டதாக நம்பப்படுகிறது.

இதுபற்றி காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் துருவ் தையா கூறும்போது, “போதைப் பொருட்கள் கடத்தலுக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது இது முதல் முறையாகும்.

எனினும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. இதுபற்றி பதிலளித்த காவல் அலுவலர், ”ட்ரோன்களை பயன்படுத்தி ஆயுதங்களும் பறிமாற்றி இருக்கலாம். பொதுவாக ட்ரோன்கள் செய்யும் முறைகள் எளிதாக கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி ட்ரோன்களை உருவாக்குவதும் எளிது” என்றார்.

இதையும் படிங்க: ட்ரோன் பந்தயத்தில் பல ட்ரோன்களை முந்திய சீனாவின் காங்க் ட்ரோன்!

ABOUT THE AUTHOR

...view details