குஜராத் மாநிலத்தில் கரோனா பாதிப்பானது சமீப நாட்களாக வேகமாக பரவிவருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில், ஆயிரத்து 743 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பின் காரணமாக 58 பேர் உயிரிழந்தனர்.
அகமதாபாத்தில் 21 காவலர்களுக்கு கரோனா - அகமதாபாத் கரோனா பாதிப்பு
காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 21 காவல்துறையினருக்கு இன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
police
இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 21 காவலர்களுக்கு இன்று கரோனா பாதிப்பு உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த அலுவர்கள் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:திங்கள் முதல் தொடங்கும் மக்களவை அலுவல்