ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் விசைப்படகு ஒன்று 20 துறைமுக ஊழியர்களை ஏற்றிச்சென்றது. விசைப்படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ பற்றி எரிந்தது.
நடுக்கடலில் தீப்பிடித்த விசைப்படகு - sea
அமராவதி: நடுக்கடலில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த துறைமுக அலுவலர்கள் விசைப்படகிலிருந்த ஊழியர்களை கடலில் குதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன் பின்னர், மற்றொரு விசைப்படகினை அனுப்பி தீயை அணைத்து, துறைமுக ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். இதில், 5 பேர் படுகாயமடைந்தனர், 15 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
நடுக்கடலில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து துறைமுக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Last Updated : Aug 12, 2019, 4:23 PM IST