ஜப்பானில் நடைபெற்ற ஜீ20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக தன்னை செயல்பட வேண்டும் என கேட்டு கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எந்த உதவியையும் அமெரிக்க அதிபரிடம் கேட்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது.
காஷ்மீர் விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்! - இந்தியா
டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தர்காளாக எந்த நாடு தலையிட வேண்டாம் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்கள் கோரிக்கை வைத்தால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா தயார் என தெரிவித்தார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள வெளிவுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், காஷ்மீர் பிரச்னையை நாங்கள் பாகிஸ்தானோடு மட்டும் தான் பேசுவோம். இதில் வேறு எந்த நாட்டின் மத்தியஸ்தமும் தேவையில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவிடம் அறிவுறுத்தியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.