தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்ரம்ப் வருகையையொட்டி தாஜ் மஹால் மூடல்

டெல்லி: இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று இந்தியா வருவதையொட்டி, தாஜ் மஹால் இன்று காலை 11.30 மணியோடு மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

US president Trump, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாஜ் மஹால் வருகை
US president Trump

By

Published : Feb 24, 2020, 10:41 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை 11.30 மணி அளவில் இந்தியா வருகிறார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தரையிறங்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து அங்கு கட்டப்பட்டு வரும் மொதேரா மைதானத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.

இதையடுத்து இன்று மாலை விமானம் மூலம் உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா செல்கிறார். பின்னர் நாளை காலை உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹாலை குடும்பத்துடன் சுற்றிப்பார்க்கிறார்.

இதனையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை 11.30 மணி முதல் தாஜ் மஹாலுக்குள் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புஹாரா உணவகத்தில் ட்ரம்புக்கு அசத்தல் உணவு!

ABOUT THE AUTHOR

...view details