தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் - இந்தியாவில் ட்ரம்ப்

Modi - Trump
Modi - Trump

By

Published : Feb 25, 2020, 1:24 PM IST

Updated : Feb 25, 2020, 10:39 PM IST

22:33 February 25

அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்

இந்தியாவில் 36 மணி நேரம் சுற்றுப்பயணம் முடிந்து தனி விமான மூலம் அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

22:31 February 25

விருந்தின் மெனு

விருந்தில் டிரம்புடன், மனைவி மெலனியா, மகள் இவாங்கா ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுக்காக அமெரிக்க சுவையுடன் கூடிய இந்திய உணவு வகைகள் அடங்கிய மெனு தயாரிக்கப்பட்டது. சைவ மற்றும் அசைவத்தை உள்ளடக்கிய மெனுவின்படி, சால்மன் மீன் டிக்கா, ஆலு டிக்கி, கீரை சாட் மற்றும் பலவகையான சூப்களுடன் விருந்து தொடங்கியது.

இதில் ராஷ்டிரபதி பவனின் புகழ்பெற்ற தால் ரைசினா, மட்டன் பிரியாணி, மட்டன் ரான் டிஷ், டம் குச்சி மாதார், புதினா ரைட்டாவும் இனிப்பில் வெணிலா ஐஸ்கிரீமுடன் ஹேசல்நட்-ஆப்பிளையும், ரப்தியுடன் கூடிய மல்புவாவையும் பரிமாரப்பட்டது.  

இந்த விருந்தில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

19:52 February 25

குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்ப்!

இரவு விருந்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். அவரை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். ராம்நாத் கோவிந்த், அவரின் மனைவி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப் ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

18:05 February 25

இந்தியாவில் நடைபெற்றும்வரும் வன்முறை சம்பவம் குறித்து மோடியுடன் பேசவில்லை - ட்ரம்ப்

டெல்லியில் நடைபெறும் வன்முறை குறித்த செய்தியாளர் கேள்விக்கு மதச்சுந்திரம் குறித்து மோடியுன் பேசியதாகவும், மக்கள் மதச்சுந்திரத்துடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்ததாகக் கூறினார். இந்தியா இதற்காக கடுமையாக உழைத்து வருவதாக தெரிவித்த ட்ரம்ப், நடைபெற்றும் வரும் வன்முறை சம்பவம் குறித்து மோடியுடன் பேசவில்லை எனவும் தெரிவித்தார். 

18:04 February 25

தலிபான்களுடனான அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது - ட்ரம்ப்

இந்திய, அமெரிக்க உறவு குறித்து பேசிய அவர், தனக்கும் மோடிக்குமான உறவு சிறப்பாக உள்ளது என தெரிவித்தார். தலிபான்களுடனான அமைதி ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பிரதமர் மோடியுடன் இதுகுறித்து பேசியதாகவும் அமைதி ஒப்பந்தம் நிறைவேறுவதை இந்தியா பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.

17:44 February 25

ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.

14:32 February 25

‘இந்தியர்களின் பெருந்தன்மையைக் கண்டு வியந்தோம்’ - ட்ரம்ப் நெகிழ்ச்சி

பின்னர் பேசிய ட்ரம்ப், "இந்திய மக்களின் பெருந்தன்மை, இரக்க குணம் ஆகியவற்றைக் கண்டு நானும் மெலனியாவும் வியந்தோம். எங்களுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பை எப்போதும் மறக்க மாட்டோம். 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அப்பாச்சி, MH-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ ஆயுதங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இரு நாட்டு பாதுகாப்பு துறையின் திறன்களை மேம்படுத்த இது உதவும்.  

இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து மக்களை பாதுகாப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். 5 ஜி வயர்லெஸ் குறித்தும் சுதந்திரம், வளர்ச்சி, வளம் ஆகியவற்றில் தொழில்நுட்பம் எந்தளவுக்கு பங்காற்றுகிறது என்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் ஆலோசித்தோம். இந்தியாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்வது நான் பொறுப்பெற்ற பிறகு 60 விழுக்காடு உயர்ந்துள்ளது” என்றார்.

14:01 February 25

‘மக்களின் நட்புறவே இரு நாட்டுக்கான அடித்தளம்’

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மோடி, "பாதுகாப்பு, எரி சக்தி, வர்த்தகம், மக்கள் சாரந்த இரு நாட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இரு நாடுகள் தொடர்பான பாதுகாப்பு விவகாரங்களை மேம்படுத்துவது நட்புறவை வளர்ப்பதற்கு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இரு நாடுகள் முடிவெடுத்துள்ளது.  

வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தையை இரு நாட்டு அமைச்சர்கள் மேற்கொண்டனர். அதற்கு சட்ட வடிவம் கொடுக்க பேச்சுவார்த்தையில் முடிவெடுத்துள்ளோம். பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். மக்களின் நட்புறவே இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய அடித்தளம்" என்றார்.  

13:57 February 25

மோடி - ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பு

மோடி, ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பு

இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

13:01 February 25

இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தொடக்கம்

இரு நாட்டு உயர் மட்ட தலைவர்களின் பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி, இரு நாட்டு உயர் மட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.

13:00 February 25

பேச்சுவார்த்தை நடத்தும் ட்ரம்ப்

இரு நாட்டுத் தலைவர்களின் உயர் மட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக ட்ரம்ப் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திற்குச் சென்றார். பேச்சுவார்த்தைகளுக்கு இடையே, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 

13:00 February 25

ராஜ்காட்டில் ட்ரம்ப் மரியாதை

ராஜ்காட்டில் ட்ரம்ப்

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் ட்ரம்ப், தனது மனைவியுடன் மரியாதை செலுத்தினார். பின்னர், பார்வையாளர் பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார்.

12:59 February 25

குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டிற்கு ட்ரம்ப் சென்றார்.

12:58 February 25

குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்ப்புக்கு சிவப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

12:57 February 25

குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்ப்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் அதிபர் ட்ரம்ப்பை வரவேற்றனர்.

12:56 February 25

குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்ப்

ட்ரம்ப்பை வரவேற்பதற்காக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் இருந்தனர். 

12:54 February 25

குடியரசுத் தலைவரை சந்தித்த ட்ரம்ப்

டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்றிரவு தங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று காலை சந்தித்தார். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

11:38 February 25

‘இந்தியாவில் ட்ரம்ப்’ - நேற்றைய (24/2/2020) நிகழ்வுகள் ஓர் பார்வை..

  • இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவியும் அந்நாட்டு முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப் ஆகியோர் நேற்று இந்தியா வந்தடைந்தனர். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், அங்குள்ள சபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட்ட ட்ரம்ப் தம்பதியர், மொடீராவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்குச் சென்றார்கள்.
  • அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோடியும், ட்ரம்ப்பும் உரையாற்றினார்கள். அங்கிருந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ராவுக்குச் சென்ற ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை சுற்றிப்பார்த்தனர்.
  • இறுதியாக, நாட்டின் தலைநகர் டெல்லிக்குச் சென்ற அவர்களை, மத்திய அமைச்சர் ஹர்திக் சிங் பூரி வரவேற்றார். இந்நிலையில், ட்ரம்ப் சுற்றுப் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, அவர்கள் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்குச் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.
Last Updated : Feb 25, 2020, 10:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details