தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதல்ல மூங்கில் பிஸ்கட், இப்ப மூங்கில் அரிசி: மூங்கிலைக் கொண்டாடும் திரிபுரா! - bamboo biscuits launch

அகர்தலா: மருத்துவ குணம் கொண்ட மூங்கில் அரிசியை திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் அறிமுகப்படுத்தினார்.

திரிபுரா முதலமைச்சர்
திரிபுரா முதலமைச்சர்

By

Published : Oct 8, 2020, 6:11 PM IST

மூங்கில் மரங்கள் 36 ஆண்டு முதல் 40 ஆண்டுவரை மட்டுமே வாழக்கூடியது. அழியும் தருவாயில் உள்ள மூங்கில் மரங்களில் பூ பூக்கத் தொடங்கும் பின்பு அரிசியாக மாறிய பின்னர் மரமே காய்ந்துவிடும். இந்த அரிசி அதிகம் மருத்துவக் குணங்கள் உடையது.

அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் மூங்கில் மரங்கள் மற்றும் அதன் பூக்களில் இருந்து கிடைத்த பிஸ்கட், அரிசி ஆகிய இரண்டையும் அந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மூங்கில் அரிசியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பேசிய திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார், இந்த அரிசியில் அதிகமான புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளது என்றும், இதைச் சாப்பிடுவதால் மூட்டு மற்றும் முதுகு ஆகிய வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்றும் தெரிவித்தார். இந்த அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக செப்டம்பர் மாதத்தில் மூங்கிலில் செய்யப்பட்ட பிஸ்கெட்களையும், மூங்கில் தேனையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். இனிப்புச் சுவையைக் கொண்ட மூங்கில் இனமான முலியில் இருந்து அவை தயாரிக்கப்படுகின்றன. இதன் தண்டு ரொம்பவே மெல்லியது. திரிபுராவில் இந்த மூங்கில் அதிகம் விளைகிறது.

இதையும் படிங்க:மருத்துவ குணம் கொண்ட மூங்கில் அரிசி சேகரிப்பில் பழங்குடியினர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details