மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஷகில் ஷேக்(53). இவர் மும்பை நகர மின்சார ரயிலில் ஜோகேஸ்வரி முதல் சர்ச்கேட் நிலையத்துக்குப் பயணம் செய்திருக்கிறார். அப்போது, அருகில் நின்றுகொண்டிருந்த நபர் இவர் கைப்பேசியை லாவகமாகத் திருடிவிட்டு, வண்டியிலிருந்து குதித்துவிட்டார். இதனைத் தெரிந்துகொண்ட ஷேக், திருடனைப் பிடித்துவிடலாம் என்றெண்ணி, வண்டியின் வேகத்தையும் பொருட்படுத்தாமல், நடைமேடையில் குதித்து ஓட முற்பட்டார்.
திருடனை பிடிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்! காணொளி - ஜோகேஸ்வரி
மும்பை: கைப்பேசியை பறித்துச் சென்ற திருடனை பிடிக்க, மின்சார ரயிலில் இருந்து குதித்து ஓட முற்பட்ட ஒருவர், வண்டிச் சக்கரத்தில் சிக்கி பலியானது பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருடனை பிடிக்க சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்! காணொலி
சற்றும் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி தொடர்வண்டியின் கீழே விழுந்தார் ஷேக். உடனடியாக அவரை காப்பாற்றச் சுற்றி இருந்த பயணிகள் ஓடிச் சென்று பார்த்ததில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.