இந்திய ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவை புதுடெல்லியில் அவரது அலுவலகத்தில் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளித்தார். அந்த மனுவில், "சென்னை முதல் மதுரை வரை செல்லும் அதிவேக விரைவு ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில்நிலையத்தில் நின்று சென்றால் பயணிகளுக்கு மிகவும் பயனாக அமையும் என குறிப்பிட்டுள்ளது.
இந்திய ரயில்வே வாரியத் தலைவரை சந்தித்த டி.ஆர்.பாலு! - வினோத் குமார் யாதவ்
டெல்லி: திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இந்திய ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
டி.ஆர்.பாலு
அவரது கோரிக்கையை ஏற்று விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக இரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மோடி பதவியேற்கும் விழாவில் திமுக பங்கேற்காது. திமுகவிற்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.