தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர் தலைவர்களுக்காக மக்களவையில் குரல் கொடுத்த டி.ஆர். பாலு - பரூக் அப்துல்லா மெகபூபா முப்தி வீட்டுக்காவல்

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரின் கைதைக் கண்டித்து மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு குரலெழுப்பியுள்ளார்.

TR Balu

By

Published : Nov 18, 2019, 2:06 PM IST

Updated : Nov 18, 2019, 5:32 PM IST

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் குரல் எழுப்பினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாலு, அவரின் விடுதலையை உறுதி செய்ய வேண்டியது மக்களவை சபாநாயகரின் கடமை எனக் கேட்டுக்கொண்டார்.

மக்களவையில் டி.ஆர். பாலு பேச்சு

வீட்டுக்காவலில் உள்ள மற்றொரு முன்னாள் முதலமைச்சரான மெகபூபா முப்தியை, அவரது மகளே சந்திக்க முடியாதவாறு அடைத்து வைத்திருப்பது மோசமான செயல் எனவும் பாலு வருத்தம் தெரிவித்தார்.

டி.ஆர். பாலுவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவையில் குரலெழுப்பினர்.

இதையும் படிங்க: மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் கதிர் ஆனந்த்

Last Updated : Nov 18, 2019, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details