உலகெங்கும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்துவருகிறது. இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றால் 1,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ளனர்.