தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மொத்த பாகிஸ்தானும் எனது பிரதேசம் - பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு - The whole of Pakistan is my territory

ஹரித்துவார்: மொத்த பாகிஸ்தானும் எனது பிரதேசம் என பாஜக எம்எல்ஏ தெரிவித்துள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ் ரத்தோர்

By

Published : Oct 8, 2019, 9:02 AM IST

உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ளது ஜவல்பூர் சட்டப்பேரவை தொகுதி. இது மாநிலத்தின் 70ஆவது சட்டப்பேரவை தொகுதியாகும். இந்தத் தொகுதியில் உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்த சுரேஷ் ரத்தோர் உள்ளார்.

சமீபத்தில் அந்தத் தொகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர், மொத்த பாகிஸ்தானும் எனது பிரதேசம் என்றார். மேலும், இந்தப் பகுதியில் தான் 48 விழுக்காடு வாக்கு பெற்றிருப்பதாகவும் அதனால் 48% பகதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது ஜவால்பூர் தொகுதியில் அதிகம் இஸ்லாமியர்களே வசிக்கின்றனர். அவர்களில் கணிசமான வாக்குகளையும் அவர் பெற்றுள்ளார். இதை முன்வைத்து தற்போது அவர் பேசியுள்ளார். அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details