டெல்லி: பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் மனிதர்களுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்த ஆய்வில் இதுவரை 58 பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 13 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனி அறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இவர்களது உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்