தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சந்திரயான்-2 செலுத்தப்பட்டதற்கு மோடி வாழ்த்து! - Modi

டெல்லி: சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மோடி

By

Published : Jul 22, 2019, 5:11 PM IST

சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி:

சந்திரயான்-2 போன்ற முயற்சிகள் நம் இளைஞர் சமுதாயத்தை அறிவியல், ஆராய்ச்சி ஆகியவற்றை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும். இந்தத் திட்டத்திற்கு நன்றி. இதன் மூலம் சந்திரனைப் பற்றியுள்ள அறிவு மேம்படும்.

மோடி வாழ்த்துச் செய்தி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்:

சந்திரயான்-2 விண்வெளியில் ஏவப்பட்டது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை மிக்க செய்தி. இதற்கு உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு:

சந்திரயான்-2 விண்கலம் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

ABOUT THE AUTHOR

...view details