தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் உயிரிழந்தவர் உடலை டிராக்டர் மூலம் எடுத்துச் சென்ற மருத்துவர்! - தெலங்கானா மருத்துவர் ஸ்ரீராம்

ஹைதராபாத்: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரை அடக்கம் செய்ய எடுத்து செல்ல அச்சம் நிலவியதால், தெலங்கானா மருத்துவர் ஒருவர் டிராக்டரில் எடுத்துச் சென்றுள்ளார்.

கரோனாவால் உயிரிழந்தவர் உடலை டிராக்டர் மூலம் எடுத்துச் சென்ற மருத்துவர்!
கரோனாவால் உயிரிழந்தவர் உடலை டிராக்டர் மூலம் எடுத்துச் சென்ற மருத்துவர்!

By

Published : Jul 14, 2020, 7:45 PM IST

Updated : Jul 14, 2020, 7:53 PM IST

கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர் உடலை கையாளத் தெரியாமல் மக்கள் மட்டுமின்றி, சுகாதாரத் துறை ஊழியர்களும் அச்சத்தில் இருந்துவருகின்றனர்.

அந்தவகையில், தெலங்கானாவின் பெடப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மருத்துவனையில் கரோனாவால் பாதித்து முதன் முதலாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) ஒருவர் உயிரிழந்துள்ளார். இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவந்த மாநகராட்சி ஊழியர் கரோனா பரவல் அச்சம் காரணமாக டிராக்டரை இயக்க அஞ்சியுள்ளார். இதனையடுத்து அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஸ்ரீராம், கரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் உடலை டிராக்டரில் வைத்து அடக்கம் செய்ய எடுத்துச் சென்றுள்ளார்.

COVIDகரோனாவால் உயிரிழந்தவரின் உடலை டிராக்டர் மூலம் எடுத்து சென்ற மருத்துவர்!

இது குறித்து மருத்துவர் ஸ்ரீராம் கூறுகையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன்தான் எடுத்துச் சென்றேன். நகராட்சி ஓட்டுநர்களுக்கு தைரியமளிக்கும் பொருட்டே இதை செய்தேன் என தெரிவித்தார்.

மருத்துவர் ஸ்ரீராமின் இந்தச் செயலை தெலங்கானா நிதியமைச்சர் முதற்கொண்டு பலரும் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க...இந்தியாவில் கரோனா தொற்றால் குணமடைத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Last Updated : Jul 14, 2020, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details