நாளுக்கு நாள் ஏடிஎம் மூலம் பணம் திருடுவது அதிகரித்து வரும் நிலையில் , 2018 -2019 ஆண்டுகளில் மட்டும் 911 க்கும் மேற்பட்ட ஏடிஎம் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெரும்பாலும் இந்த சம்பவங்கள் நள்ளிரவு முதல் விடியற்காலை வரையில் நிகழ்கிறது என ஓரியண்டல் பேங்க் ஆப் காமெர்ஸ் தலைமை அதிகாரி முகேஷ் குமார் தெரிவித்தார். இதனை தடுக்க டெல்லி மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு நடத்திய கூட்டத்தில் இரண்டு பரிவர்த்தனைகளுக்கு நடுவில் 6 முதல் 12 மணி நேர இடைவேளை வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இனி 6 முதல் 12 மணிக்கு நேரத்துக்கு ஒரு முறை மட்டுமே ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும்
டெல்லி: தொடர்ந்து கொண்டே வரும் ஏடிஎம் மோசடிகளை தடுக்க இனி 6 முதல் 12 மணிக்கு நேரத்துக்கு ஒரு முறை மட்டுமே ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும் என டெல்லி மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு நடத்திய கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
atm Transaction will be 6 to 12 hours once
கடந்த வாரம் 18 வங்கிகள் நடத்திய கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட இந்த திட்டம் செயலுக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட காலக்கெடு வரை பணம் எடுக்க முடியாது. கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் 233 ,டெல்லியில் 179 ஏடிஎம் மோசடிகள் நடைபெற்றுள்ளது.