புதுச்சேரி அதிமுக கூட்டணிக் கட்சியான என் ஆர் காங்., வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் உப்பளம், திப்பு ராயப்பேட்ட, சாமி பிள்ளை தோட்டம், உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ‘காங்கிரஸ் அரசு அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்த வில்லை. எந்தப் புதிய திட்டங்களும் கடந்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தவில்லை. கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட இலவச அரிசி வழங்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.
புதுவையை சுடுகாடாக மாற்றியிருக்கிறது காங்., - அதிமுக அன்பழகன்
புதுச்சேரி: புதுவையை காங்கிரஸ் அரசு சுடுகாடாக மாற்றியுள்ளது என அதிமுக எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரங்கசாமி அரசு ஆட்சியிலிருந்த போது ரோடியர் மில் ஊழியர்களுக்குப் பாதி சம்பளம் வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் போது விருப்ப ஓய்வு பெற்ற 800 மில் தொழிலாளிகளுக்கு வழங்கவேண்டிய தொகையை ஆளும் காங்கிரஸ் அரசு வழங்கவில்லை. முதியோருக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தரவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த காங்கிரஸ் அரசு செயல்படாத அரசாக உள்ளது. புதுச்சேரியை காங்., அரசு, மூன்றாண்டுக் காலங்களில் சுடுகாடாகவும், பாலைவனமாக மாற்றியுள்ளது’ என அதிமுக உறுப்பினர் அன்பழகன் கூறியுள்ளார்.