விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் பொழிலன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், சுதேசி காட்டன் மில் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரை. ரவிக்குமார் கலந்துகொண்டார்.
பொன்பரப்பி விவகாரம்... விசிக போராட்டம் - RAVIKUMAR
புதுச்சேரி: பொன்பரப்பியில் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேதப்படுத்திய குற்றவாளிகள் அனைவரையும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
vck
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’பொன்பரப்பியில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். அரியலூர் பொன்பரப்பி சம்பவம் கூட்டணியில் பாமக இருப்பது அதிமுக தலைமைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது’ என்றார்.