இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தேசிய மீனவர் பேரவை எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக மத்திய அரசு விவசாய அமைச்சகத்தில் இருந்து மீனவள அமைச்சகம் என்று தனியாக பிரித்து தனித் துறையை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக மத்திய அரசிற்கு தேசிய மீனவர் பேரவை, மீனவர் சமுதாயத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர் பிரச்னையில் இலங்கை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தொய்வு - central goverment
புதுச்சேரி: மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசு, இலங்கை அரசுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புதுச்சேரி மீனவர் பேரவைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார்.
மீனவர் பேரவை தலைவர் இளங்கோ
அதேபோல் புதுச்சேரி, தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு நடத்திவரும் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைந்து இந்தப் பிரச்னையை பேசி உரிய தீர்வு காண வேண்டும். மேலும் மீனவர்கள் சுருக்கு வலை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்' என்றார்.