நீட் தேர்வு நடைமுறைக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வினை (national exit test) கொண்டுவரவுள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நெக்ஸ்ட் தேர்வு என்பது தேசிய நிறைவுநிலைத் தேர்வு என்பதாகும், அதன் பெயரில் புதிதாக தேர்வு நடத்தவுள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது.
நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்! - எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி: மருத்துவப் படிப்பிற்கான நெக்ஸ்ட் தேர்வினை எதிர்த்து நாடாளுமன்றம் முன் திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த தேசிய நிறைவுநிலைத் தேர்வு நடைமுறையை எதிர்த்து நாடாளுமன்ற வளாகம் முன்பு திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நிறைவுநிலைத் தேர்விற்கு எதிராக எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி, திருச்சி சிவா, ஆ. ராசா, திருமாவளவன், ரவிக்குமார், ஜோதிமணி உள்ளிட்ட எம்பிக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, நேற்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி தேசிய நிறைவுநிலைத் தேர்வு விதிமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.