65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டு (தபால் வாக்கு) குறித்த முடிவை தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், “65 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க அனுமதிக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும். ஏனெனில் இது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது.
மேலும் இது, சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடத்தை விதிகளை மீறும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆகவே திரிணாமுல் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி இந்தத் திட்டத்தை எதிர்க்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.