நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசினார்.
அதில், ''மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணிகளான ரயில்வே, வருமான வரி, பெட்ரோலியம் உள்ளிட்ட பணிகளில் தமிழ்நாடு பட்டதாரிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசு பணிகளில் குறைந்த அளவிலேயே தமிழ்நாட்டிலிருந்து நிரப்பப்படுகிறது. அதனால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.