தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

75 வயசு மேலா ஆயிடுச்சா... அப்போ நீங்க இனி வருமான வரி செலுத்த வேண்டாம்!

டெல்லி: 75 வயதுக்கு மேலான நபர்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வருமான வரி
வருமான வரி

By

Published : Feb 1, 2021, 6:03 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். அதில், ஓய்வூதியத்தை நம்பியிருக்கும் 75 வயதுக்கு மேலான நபர்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "வருமான வரி தாக்கல் செய்யாத நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கான கால அளவு ஆறு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. வருமான வரி மோசடியில் ஈடுபடுபவர்கள், 50 லட்சம் வரையில் வருமானத்தை மறைப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கான கால அளவு 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியிருக்கும் 75 வயதுக்கு மேலான நபர்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டாம். அவர்களுக்கு பதில் வங்கியே வரிமான வரி செலுத்தும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீதி வதிக்கப்படும் இரட்டை வரி விதிப்பை குறைக்க விதி வகுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details