தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

60லட்சம் வீடியோக்களை நீக்கியது டிக்டாக்

டெல்லி: சட்டத்திற்கு புறம்பாகவும், ஆபாசமாகவும் பதிவிடப்பட்டிருந்த 60லட்சம் வீடியோக்களை டிக்டாக் நிறுவனம் நீக்கியுள்ளது.

tiktok

By

Published : Jul 23, 2019, 5:29 PM IST

சீன நிறுவனமான டிக்டாக் , ஹலோ ஆகிய செயலிகள் தேச விரோத செயலுக்கு பயன்படுவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பான ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச் பிரதமரிடம் புகார் அளித்தது.

இதையடுத்து அந்த செயலிகளின் நிர்வாகங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதில் தேச விரோத பதிவுகளை பதிவிடும் மையமாக மாறிவிட்டது என்ற புகாருக்கு விளக்கம் தருமாறு கோரப்பட்டது.

மேலும் இந்திய பயனாளர்களின் தகவல்கள் இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் எந்த வெளிநாட்டு அரசுக்கோ மூன்றாம் தரப்புக்கோ அளிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்க தயாரா? பொய் செய்திகளை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பன உட்பட 24 கேள்விகளை கேட்டது. இதற்கு சரியான பதிலை தரவில்லை என்றால் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் சட்டத்திற்கு புறம்பாகவும், ஆபாசமாகவும் பதிவிட்டிருந்த 60லட்சம் வீடியோக்களை டிக்டாக் செயலி நீக்கியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் இந்திய இயக்குனர் சச்சின் சர்மா கூறுகையில், ”திறமையையும் படைப்பாற்றலையும் வெளிக்கொணர்வதே டிக்டாக் செயலியின் நோக்கம். பயனாளர்களுக்கு பாதுகாப்பான நேர்மறையான சூழலை கொடுக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். அதை மீறும் எந்த உள்ளடக்கத்தையும் அங்கீகரிக்க மாட்டோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details