தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'டெல்லி சாலை அல்ல, நாட்டின் பிற பகுதிகளில் முற்றுகை' - பாரதிய கிசான் சங்கம்

நாளை டெல்லியின் சாலைகளை முற்றுகையிடமாட்டோம் எனவும் மாறாக நாட்டின் பிறபகுதிகளில் சாலைகள் முற்றுகையிடப்படும் என பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

Tikait says chakka jam to be pan-India except Delhi
'டெல்லி சாலை அல்ல... நாட்டின் பிற பகுதிகளில் முற்றுகை'- பாரதிய கிசான்

By

Published : Feb 5, 2021, 9:10 PM IST

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி- உத்திரப்பிரதேச எல்லையான காசிப்பூரில் கடும் குளிருக்கு மத்தியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் முதல் காசிப்பூரில் விவசாயிகளுடன் போராடிவரும் பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிக்கைட், இந்தப்போராட்டம் அக்டோபர் வரை தொடரக் கூடும் என்றும் அதற்கு காசிப்பூர் அருகேயுள்ள கிராம மக்களின் ஆதரவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திக்ரி, சிங்கு, காஷிப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை வலுப்படுத்தும் விதமாக பிப்ரவரி 6ஆம் தேதி அறிவித்த சாலைகளை முற்றுகையிடுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "சாலைகளை முற்றுகையிடுவது டெல்லியில் நடைபெறாது. மாறாக உத்தரப்பிரதேசம், ஹரியான, ராஜஸ்தான் மற்றும் தென்மாநிலங்களில் நடைபெறும்.

இந்த சாலை முற்றுகையில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவதோடு, எங்களுக்கு மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை விளக்குவோம்" என பதிலளித்துள்ளார்.

மேலும், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்பாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:போராட்டத்தில் ஈடுபடும்படி விவசாயிகள் தூண்டப்படுகின்றனர் - மத்திய வேளாண்துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details