சர்வதேச புலிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புலிகள் கணக்கெடுப்பு குறித்தான அறிக்கையை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 2014 முதல் 2018 வரை புலிகளின் எண்ணிக்கை எட்டு விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை 2,226 ஆக இருந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது.