தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா கண்காணிப்பு: ட்ரோன்களை பயன்படுத்தும் கேரளா - கேரளா ட்ரோன்கள்

திருவனந்தபுரம்: ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கண்காணிக்க திருச்சூர் காவல்துறையினர் ட்ரோன்களை பயன்படுத்திவருகின்றனர்.

coronavirus-lockdown
coronavirus-lockdown

By

Published : Mar 25, 2020, 9:10 PM IST

கேரளாவில் கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் வெளியில் சுற்றித் திரியும் மக்களை காவல்துறையினர் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பிவருகின்றனர். இந்நிலையில, ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைக் கண்டறிய திருச்சூர் நகர காவல்துறையினர் ட்ரோன்களைப் பயன்படுத்திவருகின்றனர்.

திருச்சூரில் உள்ள தெக்கின்காடு மைதானத்தின் தெற்கு கோபுரத்திலிருந்து அவற்றை இயக்கிவருகின்றனர். இதுவரை ட்ரோன்களைப் பயன்படுத்தி கண்காணிக்கப்பட்டதில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து திருச்சூர் காவல்துறையினர் கூறுகையில், ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் எளிதில் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை அடையாளம் காணமுடியும். அதன் மூலம் பல இடங்களில் காவலர்கள் கண்காணிக்கலாம் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கேரளா, சண்டிகர் முடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details