ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் - ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன்
19:27 May 27
தெலங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன்
தெலங்கானா மாநிலம் மேதாக் மாவட்டத்தில் போச்சன்பள்ளி என்னும் கிராமத்தில் விவசாயம் பார்ப்பதற்காக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் மூன்று வயது சிறுவன் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாய் வர்தன் என்ற அந்த மூன்று வயது சிறுவன் புதிதாக தோண்டப்பட்ட அந்த ஆழ்துளை கிணற்றில் அரை மணி நேரத்திலேயே விழுந்துள்ளான். சிறுவனின் பெற்றோர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் மும்முரமாய் இருந்த நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதையடுத்து சிறுவனை காப்பாற்றும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
இதைத்தொடர்ந்து வருவாய் கோட்ட அலுவலர் சாய்ராம், பாப்பன்னபேட்டா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆழ்துளை கிணற்றை மூடாததால் இந்த விபத்து நடந்துள்ளது.