கேரள மாநிலம் திருவனந்தபுரம் சந்திப்பு பகுதியான ஆற்றுக்கல் பகுதியில் காரும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து, தகவலறிந்ததும் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த காரும், திருவனந்தபுரத்திலிருந்து வந்துகொண்டிருந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது தெரியவந்துள்ளது.