ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களுடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மூன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறையினர் மீது எதிர்பாராதவிதமாக இந்தக் கொடூரத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ஜம்மூ காஷ்மீரில் கடந்த சில நாள்களாக பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் தொடர் தாக்குதலில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது.