தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல: உச்ச நீதிமன்றத்தின் புரிதல் குறித்து சட்டவல்லுநர்களின் கருத்து!

டெல்லி: இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்து சரிமானது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Though not a fundamental right reservation has been an enabling provision through law says legal experts சட்ட வல்லுநர்கள் பாமக பாலு திமுக வில்சன் அதிமுக நவநீத கிருஷ்ணன் ஒபிசி இட ஒதுக்கீடு வழக்கு நீதிபதி ஹரி பரந்தாமன் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல
supreme court

By

Published : Jun 12, 2020, 8:33 PM IST

தமிழ்நாட்டில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு தரப்பிலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையின் கீழ் வராது என்று தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடவும் பரிந்துரைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் கருத்து பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளன. இது குறித்து சட்டவல்லுநர்களின் கருத்தை ஈடிவி பாரத்தின் செய்தியாளர் மணிகண்டன் பதிவு செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் புரிதல் சரியானது. இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையல்ல. தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியிலிருந்த போதே ஓ.பி.சி இட ஒதுக்கீடு இருந்தது. இதன்பின்னர் அது விரிவுபடுத்தப்பட்டது. மண்டேல் கமிஷன் அறிக்கைக்குப் பின்பும் வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்திய அரசியலைப்புச் சட்டம் வெவ்வெறு வழிகளில் அதிகாரங்களை அளிக்கிறது.

அதன்படி இட ஒதுக்கீடு செயல்படுத்தக்கூடிய அமைப்பாகும். ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்கு மாநில அரசு சட்டம் இயற்றி மத்திய அரசின் ஒப்புதலை ஏற்கனவே பெற்றுள்ளது. இது தொடர்பான மனுவை நிராகரிக்காமல் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகச் சொல்லியிருப்பதை நான் தவறாக கருதவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபநி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு தொடர்பான மனு விசாரணைக்கு ஆஜரான திமுக மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான வில்சன், "இந்த விவகாரத்தில் சட்டப்பிரிவு 32ஐ விட 226 அதிக அதிகாரம் படைத்தது என உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், இது தொடர்பாக நீங்கள் ஏன் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடவில்லையெனவும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிவிட்டு உச்ச நீதிமன்றம் வந்திருக்கலாம் எனவும் அது கூறியது.

இது தொடர்பான ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எங்களது மனுவை தற்போதுள்ளவற்றுடன் செயலாற்ற உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட பரிந்துரைத்துள்ளது. முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செயதபோது, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ரிட் மனுவைச் சுட்டிகாட்டியது. தற்போது உயர் நீதிமன்றமே சென்னை உயர் நீதிமன்றத்தை நாடச்சொன்னதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல் செய்ய எந்த தடையும் எங்களுக்கு இல்லை" என்றார்.

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது குறித்து அவர் பேசியபோது, "ஒவ்வொரு மாணவனும் இட ஒதுக்கீட்டுக்காக நீதிமன்றத்தை நாடமுடியாது. பிரிவு 21இன் கீழ் உள்ள உரிமைகள் இதன் மூலம் பாதிக்கப்படுகிறது. நிலமையை அம்பலப்படுத்தவே நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம்" என்றார்.

அதிமுக எம்.பி.யும் தமிழ்நாடு அரசின் முன்னாள் வழக்கறிஞருமான நவநீத கிருஷ்ணன் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து குறித்து எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை என்றார். மேலும், "இட ஒதுக்கீட்டால் ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இட ஒதுக்கீடு தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டுக்கு துணை நிற்பேன். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக யாரும் இல்லை" என்றார்.

பாமகவின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான பாலு, "இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையல்ல என்பது உண்மை. அதேநேரம் ஓ.பி.சி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை இட ஒதுக்கீட்டை அனுபவிக்க மறுப்பது இதுவரை கேள்விப்படாத பாகுபாடு. பட்டியலின, பழங்குடியின, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவுகளின் கீழ் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது ஓ.பி.சி மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு மறுப்பது பாகுபாடான செயல்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details