ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தடை விதிப்பதற்கு முன்பாகவே, பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேசவ்புரா என்கிற கிராமம் மேற்கொண்டது. பிளாஸ்டிக்குகளை உட்கொண்டு பல கால்நடைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள உள்ளதாக கிராமத்தினர் முடிவெடுத்தனர்.
ஜூலை 11ஆம் தேதி 2019ஆம் ஆண்டு, பிளாஸ்டிக் கழிவுகளை குழித் தோண்டி புதைத்து கிராமத்தினர் அதற்கு தீ வைத்தனர். ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை இனி ஒருபோதும் பயன்படுத்த போவதில்லை என கிராமத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். இது அவர்களுக்கு மட்டும் நிம்மதி அளிக்கவில்லை, பல கால்நடைகளுக்கு இது ஆறுதல் அளிக்கும் விதத்தில் இருந்தது. இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு தடை விதித்தனர்.