குஜாரத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் சோனேந்திரி தேவி. இவர் தனது கணவருடன் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தார். இதனிடையே, கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, வேலையில்லாமல் வருமானமின்றி வறுமையில் தவித்து வந்த சோனேந்திரி தேவியின் கணவர் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டார். அப்போது, சோனேந்திரி தேவி 7 மாதங்கள் கர்ப்பமாக இருந்தார். இருப்பினும் வறுமையால் சோனேந்திரி தேவி துயரப்படுவதை தாங்க முடியாத கணவர் மனதை கல்லாக்கி கொண்டு தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.