வங்கக்கடலில் உருவாகிய புரெவி புயல் பாம்பனைக் கடந்த பின் கேரள கடல் பகுதிக்குச் செல்லும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால், புரெவி புயலை எதிர்கொள்ள கேரள அரசு தயாராகியுள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் விமான நிலைய சேவை இன்று (டிச. 04) காலை 10 மணி முதல் 6 மணி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புரெவி: திருவனந்தபுரம் விமான நிலைய சேவை நிறுத்தம்!
திருவனந்தபுரம்: புரெவி புயல் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலைய சேவை இன்று (டிச. 04) நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Thiruvananthapuram Airport
கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அதில், ஐந்து மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை திரும்பப் பெறப்படவில்லை. இப்பகுதிகளில் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திருவனந்தபுரம் விமான நிலையம் : 'மத்திய அரசுக்கு கேரளா ஒத்துழைப்பு வழங்காது' - முதலமைச்சர் தடாலடி!