இந்தியா - சீனா இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15 - 16 ஆகிய தேதிகள் நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர்.
சீனத் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பும் உயர்மட்ட பேச்சு வார்த்தை நடத்தியது.
இரு நாட்டு கமாண்டர்கள் (கட்டளை அதிகாரி) இடையே சுமூகப் பேச்சுவார்த்தை இரு கட்டங்கள் நடைபெற்ற நிலையில் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. கிழக்கு லடாக் பகுதியில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 12 மணிநேரம் வரை நீடித்ததாகவும், இரவு 11 மணியளவில்தான் நிறைவு பெற்றதாகவும் ராணுவத் தரப்புத் தெரிவித்துள்ளது.