தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உடன் ஆதாரை இணைக்கத்  திட்டமா? -  மத்திய அரசின் பதில் என்ன தெரியுமா? - link social media accounts to Aadhaar

ஆதார் எண்ணை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று திட்ட வட்டமாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

there is no plan to link social media accounts to aadhaar says minister ravi shankar prasad

By

Published : Nov 21, 2019, 11:58 AM IST

ஆதார் எண்ணை சமூக வலை தள கணக்குகளுடன் மத்திய அரசு இணைக்கப்போகிறதா என்று மக்களவையில், நேற்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தனி நபர்களின் விவரங்கள் எவருக்கும் அளிக்கப்படமாட்டாது என்பதன் அடிப்படையிலேயே ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது.

அதனை சமூக வலை தள கணக்குகளுடன் இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. அரசின் ஆதார் தரவுத் தளத்தில் நபரின் பெயர், வீட்டு முகவரி, வயது, பாலினம், பயோமெட்ரிக்ஸ் உள்ளிட்டவை மட்டுமே உள்ளது '' என்றார்.

இதையும் படிங்க: பான் - ஆதார் இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details