தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி இல்லையாம்! - சொல்கிறார் மத்திய அமைச்சர் - Latest National News

நாட்டிற்கு தற்போது எந்தவொரு நெருக்கடியும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டியளித்துள்ளார்.

Prakash Javadekar

By

Published : Sep 20, 2019, 10:49 AM IST

Latest National News நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "நாட்டின் அடிப்படை பொருளாதாரக் கட்டுமானங்கள் வலுவாகவே உள்ளது. நாடு தற்போது எந்தவொரு நெருக்கடியிலும் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது" என்று தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சி மந்தநிலையில் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி அமெரிக்காவில் "ஹவுடி மோடி" நிகழ்ச்சியில் பங்கேற்பதைக் கண்டித்து காங்கிரஸ் சமீபத்தில் மத்திய அரசை விமர்சித்திருந்தது. இது குறித்து கேட்டதற்கு, "அந்த நிகழ்வுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. காங்கிரசுக்கு இதுபோன்ற ஒரு வரவேற்பு கிடைத்ததும் இல்லை. இனிமேல் கிடைக்கப்போவதுமில்லை" என்றார்.

மத்தியப் பிரதேச முன்னாள்முதலமைச்சர் திக்விஜய் சிங், காவியுடையணிந்தவர்கள் கோயிலில் கூட பாலியல் வல்லுறவில் ஈடுபடுவார்கள் என்று கூறியதைக் கண்டித்த பிரகாஷ் ஜவடேகர், "அவரை காங்கிரஸ் கட்சியே மதிக்காது, பின்னர் நாம் ஏன் அவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: 'பணப்புழக்கத்தை அதிகரிக்கக் கடன் மேளா!' - நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details