கர்நாடகா மாநிலத்தில் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து பேசிய பாஜக பொது செயலாளர் முரளிதர் ராவ்,
கர்நாடகா மாநிலத்தில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. வாய்ப்பின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் இயங்காது.
காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளக் கட்சிகளுக்குள் தொடக்கத்திலிருந்தே மோதல் போக்கு நிலவி வருகிறது. மாநிலத்தில் நடந்த அனைத்து சம்பவங்களையும் கர்நாடக மக்கள் அறிந்திருக்கிறார்கள் என விமர்சித்தார்.
மேலும், பாஜக கட்சி தொடர்ந்து ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட முயற்சிப்பதாக கூட்டணி கட்சிகள் குறைக்கூறி வருவது குறித்து கூறிய ராவ்,
அரசாங்கத்தின் பலவீனங்களை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியான பாஜகவின் தலையாய கடமை. எங்கள் மீது பழிச்சுமத்துவது அடிப்படை ஆதாரமற்றது. அரசாங்கத்தை உருவாக்குவது எங்கள் பொறுப்பு அல்ல எனக்கூறி விளக்கம் அளித்தார்.